அலாரிப்பு நடனம் – டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்கள்.

சென்னை : 21 ஜனவரி 2024  ஜதிலையா நாட்டிய பள்ளியின் நிறுவனர் குரு. புஷ்பராணி துளசிராமன் அவர்களும் ஸ்ரீ நவரச நாட்டிய கலாலயா பள்ளியின் நிறுவனர் குரு. ஹேமமாலினி ராஜ்மோகன் அவர்களும் இணைந்து உலகில் முதன் முதலில் அலாரிப்பு நடனத்தை தாம்புலத்தின் மீது 620 நடன பெண் கலைஞர்களைக் கொண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள குட் வேர்ட் பப்ளிக் பள்ளியில் நடனம் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்கள். அவர்களுக்கும் நடனம் ஆடி சாதனை செய்த நடன கலைஞர்களுக்கும், கலந்து கொண்ட நாட்டிய ஆசிரியர்களுக்கும் டிவைன் உலக சாதனை புத்தகத்தின் வாழ்த்துக்கள்.