Archives June 2023

Janson இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தொடர்ந்து 42 மணி நேரம் நடன நிகழ்ச்சி -Divine World Book of Records உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

27.5.2023 மற்றும் 28.5.2023 கோவை கருமத்தம்பட்டி உள்ள Janson இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தொடர்ந்து 42 மணி நேரம் கோவை ஸ்ரீ ஆண்டாள் நாட்டியாளையம் திருமதி. லாவண்யா அவர்கள் நடன நிகழ்ச்சி நடத்தினார்கள் .

300 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கு பெற்ற இன் நிகழ்ச்சியில் 10 வகையான நடனங்கள் ஆடி உலக சாதனை செய்தார்கள்.

பரதம், குச்சிப்புடி, செமி கிளாசிக்கல், மேற்கத்திய நடனம், காவடி ஆட்டம், வள்ளி கும்மி நடன வகைகளும் இதில் இடம் பெற்றன.

தொடர்ந்து 42 மணி நேரம் நடந்த இன் நிகழ்ச்சிஇன் நிகழ்ச்சி
Divine World Book of Records உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுது.

திரு A. சேகர், கோவை சிட்டி துணை கமிஷனர், தலைமை ஏற்றும் Janson கல்லூரி பேராசிரியர் திரு. M. V. சுரேஷ் குமார் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

Divine World Book of Records நிறுவனம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .

குருபாதம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

தருமை ஆதீனம் 27 வது குருமணிகளின் சமுதாயத் தொண்டும், சமயத் தொண்டும், சிறப்பாக செய்து வருவதையும். அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனை செய்து வருவதையும் . அவருடைய சாதனைகளை பாராட்டும் வகையில்

Divine World Book of Records நிறுவனம்

சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .

குருமணிகள் செய்த சாதனைகள் :

  1. கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 க்கும் மேற்பட்ட கோவில்கள் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தமை
  1. சீர்காழி சம்பந்தர் பதிகம் 5000 நடன கலைஞர்களைக் கொண்டு நாட்டிய திருவிழா செய்தமைக்கு
  2. பல்வேறு நாடுகளில் சைவமும் தமிழும் மேன்மையுட பயணித்து தொண்டாற்றியமைக்கு
  3. அகழ்வில் அமுதத் தமிழ் தேவாரச் செப்பேடு மீட்டெடுத்த புண்ணியர் என்று குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு விருதை வழங்கி குருமகா சந்நிதானத்தின் ஆசியையும் divine world book of records பெற்றது.

Sirkali Nattiya Thiruvizha -5000

23 மே 2023 செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு சீர்காழி ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தானத்தில் 5000 நடன கலைஞர் ஆடுவதாக கூறி 7000 நபர்கள் சிறப்பாக நடனம் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இன் நிகழ்ச்சி இடம் பெற்றது. இன் நிகழ்ச்சியின் சான்றிதழ் ஸ்ரீலஸ்ரீ யிடம், தமிழக ஆளுநர் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து நடனமங்கை என்ற பட்டத்தை திருப்பூரை சேர்ந்த சாய்ஸ்ரீ அவர்கள் பெற்றுக் கொண்டார்.