பொதிகை சிலம்ப கலைக் குழு – “இயற்கையை போற்றுவோம்: ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு. Divine World Book of Records ல் இடம்  

தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதிகை சிலம்ப கலைக் குழு இயற்கையை போற்றுவோம் என்ற தலைப்பில்   800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

இவ் விழிப்புணர்வு  சாதனை Divine World Book of Records ல் இடம்  பெற்று உள்ளது.

“புதுமையை உருவாக்கு” -பிரம்மாண்ட ஓவிய போட்டி.

சென்னையில் 23 பள்ளிகளிலிருந்து  4000 மாணவர்கள் ஓவிய போட்டியில் பங்கு பெற்றனர்.

மார்ச் 21 – 2024 அன்று IMOF EDU SOLUTIONS PVT LTD மற்றும்  AJANTHA SCHOOL OF ARTS

இணைந்து நடத்திய ஓவிய போட்டியில், சென்னையில் 23 பள்ளிகளிலிருந்து  4000 மாணவர்கள் ஓவிய போட்டியில் பங்கு பெற்றனர். இதில் 400 மாணவர்கள் தேர்வு செய்யபட்டு பரிசுகள், இன்ப சுற்றுலா மற்றும் Divine World Book Of Records -யின் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

இன் நிகழ்ச்சி Divine World Book Of Records சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

 

குடியரசு தினத்தில் சேலம் எடப்பாடியில் பரதநாட்டியத்தில் உலக சாதனை

எடப்பாடி  26 ஜனவரி 2024 கனீஷ்வர் நாட்டியாலயா மற்றும் கலைமகள் வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி எடப்பாடி இணைந்து 350 க்கும் மேற்பட்ட பரத மாணவிகளை கொண்டு ஆன்மிகம் மற்றும் தேச பற்று பாடல்களுக்கு 25 நிமிடங்கள் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இதில் 13 நடன பள்ளிகள் கலந்துகொண்டனர். நடன ஆடிய பெண்களுக்கு நாட்டிய மணி என்ற விருது டிவைன் உலக சாதனை வழங்கி பாராட்டியது.

அலாரிப்பு நடனம் – டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்கள்.

சென்னை : 21 ஜனவரி 2024  ஜதிலையா நாட்டிய பள்ளியின் நிறுவனர் குரு. புஷ்பராணி துளசிராமன் அவர்களும் ஸ்ரீ நவரச நாட்டிய கலாலயா பள்ளியின் நிறுவனர் குரு. ஹேமமாலினி ராஜ்மோகன் அவர்களும் இணைந்து உலகில் முதன் முதலில் அலாரிப்பு நடனத்தை தாம்புலத்தின் மீது 620 நடன பெண் கலைஞர்களைக் கொண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள குட் வேர்ட் பப்ளிக் பள்ளியில் நடனம் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்கள். அவர்களுக்கும் நடனம் ஆடி சாதனை செய்த நடன கலைஞர்களுக்கும், கலந்து கொண்ட நாட்டிய ஆசிரியர்களுக்கும் டிவைன் உலக சாதனை புத்தகத்தின் வாழ்த்துக்கள்.

ஸ்ரீ பிருந்தாவன் நாட்டிய கலாஷேத்ராவின் நடனம். – டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் -வாழ்த்துக்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பெருமுகையில் சஞ்சீவி ராம்கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை (23.12.23) முன்னிட்டு 500 நடன கலைஞர்களைக் கொண்டு ஸ்ரீ பிருந்தாவன் நாட்டிய கலாஷேத்ராவின் நடன ஆசிரியர் திருமதி. ஆண்டாள் பழனிசாமி அவர்கள் பாரம்பரிய நடனமான பரதம் மற்றும் கும்மி நடனங்கள் ஆடினார்கள். இன் நிகழ்வை டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பாராட்டி தன் வாழ்த்துக்களை தெரிவித்தது.

ஈகை சிலம்பம் அக்கடமி மற்றும் காவல் துறை – சிலம்பம் சுற்றி டிவைன் உலக சாதனை இடம் பெற்றார்.

அக்டோபர் 1 சென்னை st. தாமஸ் மவுண்ட்டில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈகை சிலம்பம் அக்கடமியின் நிறுவனர் சுரேந்தர் தன் பள்ளி மாணவர்கள், மற்றும் காவல் துறையினருடன் , 350க்கும் மேற்பட்ட சிலம்ப கலைஞர்களுடன் 3மணி நேரம் 30 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இவருக்கும் இவருடைய பள்ளி மாணவர்களுக்கும் டிவைன் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

வாழ் நாள் – சாதனையாளர் விருது

கோவை ஜான்சன் கல்லுரியில் நடைபெற்ற சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சியில் ஆசான் மாககுரு திரு. ப. கருப்பசாமி ஐயா (வயது 86). இவர் 2000 க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்களை உருவாக்கி பல சாதனைகளும் படைத்து உள்ளார்.

இன்றும் தன் வாரிசுகளுடன் கோவையில் சிலபம் பயிற்சி கூடம் வைத்து உள்ளார்கள். இவரின் கலை ஆர்வதினை பாராட்டி Divine World Book of Records வாழ் நாள் சாதனையாளர் விருதினை வழங்கி வணங்குகிறது.

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி – சிலம்பம் சுற்றுதல்.

செப்டம்பர் 24, 2023 இந்தியன் கேன்சர் சென்டர் மற்றும் ஜான்சன் இன்ஸ்டூட் டெக்னாலஜி கல்லூரி கோவை இனைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 160 சிலம்ப கலைஞர்கள் குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகளாக கலந்து கொண்டு 3 மணி நேரம் 3 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார்கள்.

160 சிலம்ப கலைஞர்கள்;

3 மணி நேரம் 3 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை.