Archives January 2023

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கையை விளக்கும் விதமாக, 200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம். Divine world book of records சார்பில் அங்கீகரிக்கப்பட்டது.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கையை விளக்கும் விதமாக,   2 ஜனவரி 2023 அன்று  10 மணி நேரத்தில் 200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்தார். திருப்பூர் மாணவர் இளவரசன்11– ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகள் மற்றும் அவர் இயற்றி தந்த அரசியல் அமைப்பு சட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் திருப்பூரிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் வரை 200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு காலை 10 மணிக்கு தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.

மாணவன் இளவரசன் சைக்கிளின் பின்னால் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் பொருத்திய கொடியுடன் திருப்பூரிலிருந்து கிளம்பியவர் தொடர்ந்து பத்து மணி நேரம் சைக்கிள் பயணம் செய்து 200 கிலோமீட்டர் தூரம் சென்று திருச்சி மாவட்டம் துறையூரில் இரவு 8 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்தார்.  டிவைன் உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்டது.   சாதனை புரிந்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் அவர்களின் கையால் சான்றிதழ்களையும், கேடயமும் வழங்கப்பட்டது.

தேனி வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவிலில் “அம்மனுக்கு திருவிழா ” – 5 வயது முதல் 18 வயது வரை இருக்கும் குழந்தைகள் பரத நடனம்.

8.1.2023 ஞாயிறு காலை தேனி வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவிலில் “அம்மனுக்கு திருவிழா ” என்ற தலைப்பில் அம்மனுடைய குழந்தை பருவம் முதல் திருமணம் வரை அவளுடைய வாழ்க்கை வரலாற்றை மிக அற்புதமான நடனத்தின் மூலம் 5 வயது முதல் 18 வயது வரை இருக்கும் குழந்தைகள் பரத நடனத்தின் மூலம் கூறினார்கள். இன் நிகழ்ச்சியை மாண்புமிகு திரு. ஓ. பன்னிர்செல்வம் அவர்கள், முன்னாள் தமிழக முதல்வர் தலைமையில் மிக சிறப்பாக நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சி Divine World Book of Records ல் இடம் பெற்று உள்ளது