சீர்காழி ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தானத்தில் 23 மே 2023 செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு 5000 நடன கலைஞர் ஆடுவதாக கூறி 7000 நபர்கள் சிறப்பாக நடனம் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இன் நிகழ்ச்சி இடம் பெற்றது. இன் நிகழ்ச்சியின் சான்றிதழ் ஸ்ரீலஸ்ரீ யிடம், தமிழக ஆளுநர் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து நடனமங்கை என்ற பட்டத்தை திருப்பூரை சேர்ந்த சாய்ஸ்ரீ அவர்கள் பெற்றுக் கொண்டார்
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கையை விளக்கும் விதமாக, 2 ஜனவரி 2023 அன்று 10 மணி நேரத்தில் 200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்தார். திருப்பூர் மாணவர் இளவரசன். 11– ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகள் மற்றும் அவர் இயற்றி தந்த அரசியல் அமைப்பு சட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் திருப்பூரிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் வரை 200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு காலை 10 மணிக்கு தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
மாணவன் இளவரசன் சைக்கிளின் பின்னால் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் பொருத்திய கொடியுடன் திருப்பூரிலிருந்து கிளம்பியவர் தொடர்ந்து பத்து மணி நேரம் சைக்கிள் பயணம் செய்து 200 கிலோமீட்டர் தூரம் சென்று திருச்சி மாவட்டம் துறையூரில் இரவு 8 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்தார்.
டிவைன் உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்டது. சாதனை புரிந்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் அவர்களின் கையால் சான்றிதழ்களையும், கேடயமும் வழங்கப்பட்டது.
செல்வி தக்ஷ்தா 5 வயது 5 மணி நேரம் 5 விதமான தொடர் நடனம்.பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடனம் ஆடி Divine World Book of Records பதிவு செய்தார். தக்ஷிதா அவர்களுக்கு எங்களுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
IMOF EDU SOLUTIONS PVT LTD மற்றும் AJANTHA SCHOOL OF ARTS, 21 மார்ச் 2024 அன்று இணைந்து நடத்திய ஓவிய போட்டியில், சென்னையில் 23 பள்ளிகளிலிருந்து 4000 மாணவர்கள் ஓவிய போட்டியில் பங்கு பெற்றனர். இதில் 400 மாணவர்கள் தேர்வு செய்யபட்டு பரிசுகள், இன்ப சுற்றுலா, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.