Archives February 2024

குடியரசு தினத்தில் சேலம் எடப்பாடியில் பரதநாட்டியத்தில் உலக சாதனை

எடப்பாடி  26 ஜனவரி 2024 கனீஷ்வர் நாட்டியாலயா மற்றும் கலைமகள் வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி எடப்பாடி இணைந்து 350 க்கும் மேற்பட்ட பரத மாணவிகளை கொண்டு ஆன்மிகம் மற்றும் தேச பற்று பாடல்களுக்கு 25 நிமிடங்கள் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இதில் 13 நடன பள்ளிகள் கலந்துகொண்டனர். நடன ஆடிய பெண்களுக்கு நாட்டிய மணி என்ற விருது டிவைன் உலக சாதனை வழங்கி பாராட்டியது.

அலாரிப்பு நடனம் – டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்கள்.

சென்னை : 21 ஜனவரி 2024  ஜதிலையா நாட்டிய பள்ளியின் நிறுவனர் குரு. புஷ்பராணி துளசிராமன் அவர்களும் ஸ்ரீ நவரச நாட்டிய கலாலயா பள்ளியின் நிறுவனர் குரு. ஹேமமாலினி ராஜ்மோகன் அவர்களும் இணைந்து உலகில் முதன் முதலில் அலாரிப்பு நடனத்தை தாம்புலத்தின் மீது 620 நடன பெண் கலைஞர்களைக் கொண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள குட் வேர்ட் பப்ளிக் பள்ளியில் நடனம் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்கள். அவர்களுக்கும் நடனம் ஆடி சாதனை செய்த நடன கலைஞர்களுக்கும், கலந்து கொண்ட நாட்டிய ஆசிரியர்களுக்கும் டிவைன் உலக சாதனை புத்தகத்தின் வாழ்த்துக்கள்.